4 கோவில்களில் அடுத்தடுத்து உண்டியல் உடைத்து திருட்டு
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சதாசிவபுரத்தில் கருப்பண்ணார், திரவுபதி அம்மன், செல்லியம்மன், அய்யனார் கோவில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட இந்த 4 கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், 4 கோவில்களின் முன்னே இருந்த உண்டியல்களை உடைத்து, அதில் இருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடியுள்ளனர்.
மேலும் கோவிலில் இருந்த பித்தளை, வெண்கல மணிகள், பூஜை தட்டுகள் உள்ளிட்ட பொருட்களையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஒரே நேரத்தில் 4 கோவில்களில் அடுத்தடுத்து உண்டியல் உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.