பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாதம் தோறும் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் சேலத்திலிருந்தும் திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் பக்தர்களின் வசதிக்காக சேலத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் எண்ணிக்கையானது இந்த முக்கியமான தினங்களில் அதிகமாக இயக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த மாதம் புரட்டாசி பவுர்ணமி கிரிவலத்தை தொடர்ந்து பக்தர்கள் வசதிக்காக சேலம் கோட்டத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரித்து அறிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புறநகர் பேருந்து நிலையம், தருமபுரி மற்றும் ஓசூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் நாளை புதன் மதியம் 2 மணி முதல் அடுத்த நாளான வியாழக்கிழமை மதியம் 2 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் 1 மணிக்கு ஓர் பேருந்து கிளம்பும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பயணிகள் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இதற்கான இணையதளம் மற்றும் மொபைல் ஆப் வழியாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.