சேலம் – சென்னை செல்ல விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு
ஓமலுார்: உடான்’ திட்டத்தில் சேலம் விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, கொச்சின் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, ‘இண்டிகோ, அலையன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சேலத்திலிருந்து சென்னை செல்பவர்களுக்காக ‘இண்டிகோ’ நிறுவனம் ‘உடான்’ அல்லாத திட்டத்தில் விமான சேவையை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் சேலம் -சென்னை விமான சேவையை இந்த நிறுவனம் மட்டுமே இயக்கி வருகிறது.
சுமார் 70 சீட்டுகள் உள்ள ஏ.டி.ஆர்., ரக விமானம் தினமும் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தினமும், 55 முதல், 60 பேர் இந்த விமானத்தில் சென்னை செல்வதற்காக ரிசர்வ் செய்கின்றனர். இதற்காக சாதாரண நாட்களில், பயண கட்டணமாக 3,500 முதல், 4,500 ரூபாய் வரை ஏறக்குறைய 3 மடங்கு அதிகமாக வசூலிக்கபடுகிறது